வேலூர் ஜெயிலில் கைதி திடீர் உயிரிழப்பு

போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற ஆசை தம்பி கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
வேலூர் ஜெயிலில் கைதி திடீர் உயிரிழப்பு
Published on

வேலூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 35). போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று ஜெயிலில் இருந்த ஆசை தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்தார்.

பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com