கோவில்களில் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ்

கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை வரிசையில் நிற்க விடாமல் சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
Minister Ramesh
Published on: 

தமிழக கோவில்களில் கர்ப்பிணி பெண்களை வரிசையில் நிற்க வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் அனைத்திலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை வரிசையில் நிற்க விடாமல் சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்து கோவில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com