மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல்

தமிழக முதல்வர் முன்னிலையில் பிரவீன் சக்கவர்த்தி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல்
Published on

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால், 107 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சி த.வெ.க. உடன் கூட்டணி வைத்துள்ளது.

தவெக-வுக்கு ஒரு இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பதால், த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் நினைக்கும் நபர் மாநிலங்களவை எம்.பி.யாகலாம் என்ற நிலை இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுகிறது என த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரவீன் சக்கவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் உடனிருந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிரவீன் சக்ரவர்த்தி, “த.வெ.க. தலைவர் ஜோசப் விஜயின் பெருந்தன்மை, கருணை மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, கார்கே, கேசி வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் எனக்கு கொடுத்த வாய்ப்பு. இதை பெரிய பொறுப்பாக நான் நினைக்கிறேன். பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குரல் ஓங்கும். த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள், கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் சொல்லவும் நான் பாடுபடுவேன்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com