மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்

முதல்‌ பிரிவில்‌ தலா 210 மெகா வாட்‌ திறன்‌ கொண்ட 4 அலகுகளும்‌, 2-வது பிரிவில்‌ 600 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட ஒரு அலகும்‌ உள்ளது.ஊழியர்கள் பழுதை சரி செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்
Published on

மேட்டூர்:

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருதின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. முதல் பிரிவு மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் என 2 பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுதிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com