தோரணமலையில் மழை வேண்டி பொங்கலிட்டு வருண கலச பூஜை

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
தோரணமலையில் மழை வேண்டி பொங்கலிட்டு வருண கலச பூஜை
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரண மலை முருகன் கோவில்.

அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட புராண சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடைய இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலை மீது சுனையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அடிவாரத்தில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி நீங்கவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி, இன்று காலை பெண்கள் பொங்கலிட்டு மழைக்கும்மி பாடல் பாடி வழிபாடு செய்தனர் .விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com