முற்றுகை போராட்டம் எதிரொலி- பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம் எதிரொலி- பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
Published on

ஈரோடு:

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து அழைத்து சென்றபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று மாலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் முற்றுகையிட வந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவல கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தவிர வேறு யாரும் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்தால் அவர்களை போலீசார் அனுப்பி விடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com