பிறந்து 10 நாளே ஆன குழந்தையின் உடலை கடித்து குதறிய நாய்கள்- வீசிச்சென்ற தாயை போலீசார் தேடுகிறார்கள்

பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்து 10 நாளே ஆன குழந்தையின் உடலை கடித்து குதறிய நாய்கள்- வீசிச்சென்ற தாயை போலீசார் தேடுகிறார்கள்
Published on

சோழவரம்:

சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டினார்கள். அப்போது குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முகமும் அழுகி சிதைந்து காணப்பட்டது.

குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி உள்ளது. எனவே பிறந்தவுடன் குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியை சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் குழந்தையின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com