நெல்லையில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி- பணிச்சுமை காரணமா?

உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
நெல்லையில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி- பணிச்சுமை காரணமா?
Published on

நெல்லை:

பாளை குலவணிகர் புரத்தை சேர்ந்தவர் உச்சி மாகாளி(வயது 39). இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் இயங்கும் தனிப்படையிலும் இவர் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி வெங்கடேஷ்வரி தென்காசி மாவட்ட போலீசில் டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே உச்சிமாகாளி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், யாரிடமும் பேசாமல் இருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை ஏதேனும் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com