இறந்த நிலையில் குப்பையில் வீசப்பட்ட பெண் சிசு- போலீசார் விசாரணை

பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இறந்த நிலையில் குப்பையில் வீசப்பட்ட பெண் சிசு- போலீசார் விசாரணை
Published on

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள குப்பை மேட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து எருமப்ப ட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைமேட்டில் இறந்து கிடந்த பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குப்பைமேட்டில் இறந்த பெண் சிசுவை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ ர்கள் எருமப்பட்டி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com