ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Published on

திருச்சி:

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.

நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் காலை 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடி அங்கு ரோடு ஷோ நடத்தினார்.

காரில் நின்றபடி பயணம் செய்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கையசத்தார். பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com