45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியேறினார் பிரதமர் மோடி

நேற்றுமுன்தினம் மாலை விவேகானந்தர் மண்டபம் சென்றார் பிரதமர் மோடி.நேற்று முழுவதும் தியானம் செய்த நிலையில், இன்று மதியம் தியானத்தை முடித்துக் கொண்டார்.
45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியேறினார் பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில் மூன்று நாட்கள் பயணமாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை மாலை) வந்தடைந்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், விவேகானந்தனர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானம் செய்ய தொடங்கினார்.

நேற்று சூரிய வழிபாடு செய்தார். பின்னர் தொடர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். இன்று மதியம் 2.45 மணி அளவில் 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். திருவள்ளூர் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com