ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் மற்றும் கருடாழ்வாரை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்கிறார்.ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் மற்றும் கருடாழ்வாரை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி
Published on

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலின் தெற்கு கோபுர வாயில் வழியாக நுழைந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கருடாழ்வார், மூலவர் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். மேலும் தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்கிறார்.

கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்கிறார்.

ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com