கனமழை எதிரொலி: பில்லூர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியது

பில்லூர் அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது. பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: பில்லூர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியது
Published on

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியான முழு கொள்ளளவை எட்டியது.

அணையின் முழு கொள்ளளவான 100 அடியை எட்டிய நிலையில், 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.

அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com