பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு

காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய புதிய ஆன்லைன் டெண்டர் TNCCF சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு
Published on

காமராஜர்

ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை, முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எம்.ஜி.ஆர்.

காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டெண்டர்

காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய புதிய ஆன்லைன் டெண்டர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com