‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்!

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
marie wilson
Published on

தமிழக சட்டமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என்.மரிய வில்சன், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

திட்டத்தின் பெயர் மாற்றம்:

தமிழக முதலமைச்சர் விஜயின் அறிவிப்பின்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயர் சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்:

இதுவரை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், இனி 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு:

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக பட்ஜெட்டில் ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பசி போக்கி, அவர்களின் கல்விச் சேர்க்கை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com