நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை- சீமான்

60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.
நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை- சீமான்
Published on

விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை.

நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.

நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு.

ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது. பாதிக்கும்போது உங்களுக்கு புரியும்.

இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com