தொழில்நுட்ப கோளாறு- சென்னை மெட்ரோ ரெயிலில் சிக்கிய பயணிகள்

தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரி செய்தனர்.
தொழில்நுட்ப கோளாறு- சென்னை மெட்ரோ ரெயிலில் சிக்கிய பயணிகள்
Published on

சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் ரெயில் கதவுகள் திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி சென்ற மெட்ரோ ரெயிலில் தொழில்நுட்ப கோளாறால் கதவுகள் திறக்கப்படவில்லை.

தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரி செய்தனர்.

பின்னர், பயணிகள் ரெயிலில் இருந்து வெளியேறினர்.

மெட்ரோ ரெயில் கதவுகள் திறக்காததால் மெட்ரோ ரெயில் சேவை 30 நிமிடங்களுக்கு தாமதமானதால் மக்கள் தவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com