வாக்குப்பதிவு முடிந்ததால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் - திமுக வழக்கறிஞர் வில்சன்

காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
வாக்குப்பதிவு முடிந்ததால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் - திமுக வழக்கறிஞர் வில்சன்
Published on

நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4 ஆம் தேதி வரை அமலில் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருப்பதால் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com