மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியரை தாக்கிய பெற்றோர்

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் முருகன்.
தலைமை ஆசிரியர் முருகன்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (வயது 51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமை ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com