

பாபநாசம் உதவி செயற்பொறியாளர் சிற்றரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாபநாசம் துணை மின் நிலையத்தில் நாளை 6-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம் கிளியூர், நல்லூர், ஆவூர், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ் வாஞ்சேரி, காருகுடி, சால போகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.