ஆம்ஸ்ட்ராங் படுகொலை- கண்ணீர் விட்டு கதறிய பா.ரஞ்சித்

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.சென்னை பெரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை- கண்ணீர் விட்டு கதறிய பா.ரஞ்சித்
Published on

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரம்பூரில் வசித்து ஆம்ஸ்ட்ராங், இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தியை கேட்டு பா.ரஞ்சித் கதறி அழுத செய்தி வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்த இயக்குநர் பா.ரஞ்சித் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com