தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை:

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com