அம்பானி இல்லத் திருமணம்- தம்பதியை நேரில் சென்று வாழ்த்திய ஓபிஎஸ்

மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
அம்பானி இல்லத் திருமணம்- தம்பதியை நேரில் சென்று வாழ்த்திய ஓபிஎஸ்
Published on

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com