கோயம்பேட்டில் பரபரப்பு- ஆம்னி பேருந்துகளையும், பயணிகளையும் திருப்பி அனுப்பும் போலீசார்

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்பு.
கோயம்பேட்டில் பரபரப்பு- ஆம்னி பேருந்துகளையும், பயணிகளையும் திருப்பி அனுப்பும் போலீசார்
Published on: 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை கோயம்பேடுக்கு திரும்பும் ஆம்னி பேருந்துகளை திருப்பி அனுப்பப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், கோயம்பேட்டிற்கு வரும் ஆம்னி பேருந்து பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆம்னி பேருந்து தரப்பில் கோயம்பேட்டிற்கு வர கூறியதாகவும், பின்னர் கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவதாலும், ஆம்னி பேருந்துகள் தொடர்பாக சரியான தகவல் இல்லாததால், எங்கு செல்வது என தெரியவில்லை என பயணிகள் புலம்பி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com