கல்லாவி அருகே ரெயில் மோதி மூதாட்டி பலி

ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லாவி அருகே  ரெயில் மோதி மூதாட்டி பலி
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.

அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.

மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com