எண்ணெய் கழிவு: நிலத்தடி நீரை சோதனை செய்ய வேண்டும்

மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
எண்ணெய் கழிவு: நிலத்தடி நீரை சோதனை செய்ய வேண்டும்
Published on

எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com