தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்- இன்று நண்பகலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சத்யபிரதா சாகு

மக்களவை தேர்தல் 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவு.
தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்- இன்று நண்பகலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சத்யபிரதா சாகு
Published on

18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்து முடிந்தது.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com