கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.
Published on

கடலூர்:

வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுக அலுவலகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com