காதல் தோல்வியால் வடமாநில வாலிபர் தற்கொலை

இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது.மனமுடைந்த சஞ்சய் பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார்.
காதல் தோல்வியால் வடமாநில வாலிபர் தற்கொலை
Published on

மாமல்லபுரம்:

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சஞ்சய் பர்மல் (வயது20). இவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒற்றில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீடியோ கால் மற்றும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.

அப்போது அந்த இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே சஞ்சய்பர்மல் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அவர் தனது காதல் குறித்து அவரிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. மேலும் நட்பாக பழகியதாக கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்தநிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com