நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது- சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டம்

6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது- சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டம்
Published on

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com