விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை- மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு

சிலைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய பாளையங்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தடை விதிக்க கூடாது என வழக்கு.பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது என்றும் உத்தரவு.
விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை- மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு
Published on

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சில யோசனைகளுடன், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது.

சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம்.

வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com