கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

கடலூர்:

மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

இது புயலாக மாறினால் ரீமேக் என புயலுக்கு பெயர் சூட்ட உள்ளனர். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வருகிற 26-ந் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதின்பேரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com