நீலகிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகளில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டனஇந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
நீலகிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகளில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு
Published on

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com