தாம்பரத்தில் 17 பவுன் நகை-பணத்துடன் புதுப்பெண் மாயம்

நடராஜன் பேக்கரியில் வேலை பார்த்தபோது அபிநயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார்.
தாம்பரத்தில் 17 பவுன் நகை-பணத்துடன் புதுப்பெண் மாயம்
Published on

தாம்பரம்:

மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்தபோது அங்கு வேலை செய்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து நடராஜன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் நகை-பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அபிநயாவின் குடும்ப பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com