தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Published on

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.

இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.

இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.

இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com