உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி.
Minister Vinoth
Published on

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவித்து விவசாய விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்க ஆராய்ச்சி மையம்.

தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

நீலகிரி மாவட்டம் உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com