திருவள்ளூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக நீலமேகம் நியமனம்

பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு நீலமேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக நீலமேகம் நியமனம்
Published on

பொன்னேரி:

விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீலமேகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

பின்னர் மீஞ்சூர், பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அவருடன் தொகுதி செயலாளர் சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் உமாபதி, மீஞ்சூர் நகர செயலாளர் சந்திரசேகர், பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது மீஞ்சூர் மற்றும் பொன்னேரி வட்டாரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com