தேங்காய் பருப்பு விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த தேங்காய்கள்.
ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த தேங்காய்கள்.
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை உயந்துள்ளதால் தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நாமக்கல் விற்பனை குழுவில் உள்ள பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1492 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.20-க்கும், குறைந்த பட்சமாக ரூ17.00 -க்கும், சராசரியாக ரூ.21-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30ஆயிரத்து 433-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 2114 கிலோ தேங்காய் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுரூ.28.00-க்கும், குறைந்தபட்சமாக ரூ.25.25-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது மொத்தம் ரூ.56 ஆயிரத்து769 -க்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை உயந்துள்ளதால் தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com