நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் திடீர் சஸ்பெண்டு

சஸ்பெண்டு உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் திடீர் சஸ்பெண்டு
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே அவர், இங்கு பணியில் உள்ளார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் என்ஜினீயர் பால சுப்பிரமணியன் இன்று திடீரென பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த தகவல் மாநகராட்சி பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ஜினீயர் பால சுப்பிரமணியன் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com