நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்

நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்
Published on

நாகப்பட்டினம்:

நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று காணொலி மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நேற்று கப்பலில் 50 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் மாலை நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் ஆர்வமுடன் வந்திறங்கிய 30 இலங்கை பயணிகளுக்கு நாகை துறைமுக அலுவலர்கள் இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிலையில் இன்று நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் கப்பலில் செல்ல 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதால் இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com