நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்

நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சோகத்தில் உள்ளனர்
Published on

சென்னை:

நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நாகை எம்.பி. செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் நாகை தொகுதியில் கடந்த 1989, 1996, 1998 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com