படவேடு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பஸ்சை ஓட்டி சென்ற மர்ம நபர்- போலீஸ் விசாரணை

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர். அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
படவேடு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பஸ்சை ஓட்டி சென்ற மர்ம நபர்- போலீஸ் விசாரணை
Published on

ஆரணி:

ஆரணி அருகே படவேடு பஸ் நிறுத்தம் எதிரே பாட்டு கச்சேரி மைதானம் உள்ளது. இங்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று (திங்கட்கிழமை) டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர். அப்போது ஆற்காடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் கடந்த 26-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு பஸ்சை மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் விடுமுறை நாளில் ஏன் பஸ்சை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு சர்வீஸ் செய்ய கொண்டு போகிறேன் எனக் கூறியுள்ளார்.

அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சந்தவாசல் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி பழுது அடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்லூரிக்கு செல்ல வந்த மாணவர்கள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com