சேலத்தில் பரபரப்பு: தி.மு.க. கவுன்சிலரை தீர்த்துக்கட்ட கத்தியுடன் வந்த மர்ம நபர்கள்

கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.
சேலத்தில் பரபரப்பு: தி.மு.க. கவுன்சிலரை தீர்த்துக்கட்ட கத்தியுடன் வந்த மர்ம நபர்கள்
Published on

சேலம்:

சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிபட்டி பகுதி தி.மு.க செயலாளராகவும், 14-வது டிவிசன் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து, கதவை தட்டி உள்ளனர்.

கவுன்சிலர் சாந்தமூர்த்தி வந்து யார் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உங்களை பார்க்க வேண்டும், வெளியே வாருங்கள் என்றனர். ஆனால் கவுன்சிலர் சாந்தமூர்த்தி என்ன பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே அந்த மர்ம நபர்கள், வெளியே வாடா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறினர்.

இதையடுத்து கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தார்.

இதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com