ஜேடர்பாளையம் அருகே வாலிபர் குளியல் அறையில் மர்ம மரணம்

அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே வாலிபர் குளியல் அறையில் மர்ம மரணம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி,

வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). கட்டிட மேஸ்திரி.

நேற்று முன்தினம் முத்துக்குமாரை குரும்பல மகாதேவி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமார் குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கிருபா(26) குளியலறைக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்த கிருபா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

அப்போது அவரது கணவர் சுவர் ஒரத்தில் குப்புற விழுந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com