மழை நீர் வடிய தொடங்கியதால் 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்

கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.
மழை நீர் வடிய தொடங்கியதால் 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி ரெயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

அதேபோல் சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் கூறும்போது, தாங்கள் 5 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com