சந்தனகூடு விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
சந்தனகூடு விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
Published on

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 351-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com