தேசிய கொடிக்கம்பத்தை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களை சிறைபிடித்து பொதுமக்கள்

கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.
தேசிய கொடிக்கம்பத்தை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களை சிறைபிடித்து பொதுமக்கள்
Published on

கடலூர்:

பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த நிர்வாகத்தினர் கொடி கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடலூர் முதுநகர் அடுத்த சோனாங்குப்பம் பகுதியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர். பின்னர் அங்குள்ள கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தேசியக்கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று இடித்து அகற்றினார்கள்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் கோபம் அடைந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

பின்னர் பொதுமக்கள் ஜே.சி.பி. வாகனம் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விடுவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com