கல்லூரி மாணவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது. கல்லூரி மாணவரான லோகேஷ் காலிலும் முறிவு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
Published on

போரூர்:

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்தவர் பஷீர் பேகம் (வயது60). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பஷீர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான லோகேஷ் (19) என்பவரது காலிலும் முறிவு ஏற்பட்டது. அவருக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com