சென்னையில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்- 8 விமானங்கள் ரத்து

விமான நிலைய அதிகாரிகள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்து வருகின்றனர்.போர்டிங் பாஸ்கள் கொடுக்க தாமதமானதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்- 8 விமானங்கள் ரத்து
Published on

மைக்ரோசாப்ட் சேவை முடங்கிய விவகாரத்தால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது.

பிற்பகல் 12 மணியில் இருந்து சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது.

இணையதளம் சரியாக வேலை செய்யாததால் கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், விமான நிலைய அதிகாரிகள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்து வருகின்றனர்.

போர்டிங் பாஸ்கள் கொடுக்க தாமதமானதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com