மதுரையின் புதிய அடையாளம் - 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

உயர்மட்ட மேம்பால பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றது. கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
உயர்மட்ட மேம்பாலம்
உயர்மட்ட மேம்பாலம்
Published on

மதுரை:

மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களுடன் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது, மதுரை மேம்பாலத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com